Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Kogilavani / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
'கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு, நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்' என்று, யாழ்.மாநகரசபை உறுப்பினர் சடடத்தரணி வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில், இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், இலங்கைச் சிறைகளில் 10 தொடக்கம் 20 வருடங்களுக்கு மேலாக, 78க்கும் அதிகமான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்நிலையில் 15க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகியுள்ளர் என்றும் தெரிவித்தார்.
ஏனையவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயமுள்ளதாகவும் தெரிவித்தார்.
'இலங்கை சிறைச்சாலைகள் நெருக்கடி மிக்கவை. அத்துடன் சுகாதார வசதிகளும் அற்றவை. இந்நிலையில் தொடர்ந்து அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதால் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படும் நிலையுள்ளது. எனவே, மனிதாபிமான அடிப்படையில் நிபந்தனைகள் இன்றி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்' என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை யாழ்.மாநகர சபையில் புதிய முதல்வர் தெரிவின்போது தங்களின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அவர், 'நிதி அறிக்கையிலுள்ள உள்ள சில குறைப்பாடுகளும் கடந்த காலங்களில் முதல்வரின் நடவடிக்கையில் ஏற்பட்டு இருந்த அதிருப்தியாலுமே நிதி அறிக்கையை எதிர்த்தோம். எதிர்வரும் காலங்களில் யாழ்.மாநகர சபையில் சிறப்பான ஆட்சி அமைக்க உதவுவோம்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago