Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க வித்தியசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "சன்மார்க்கன் நடைபவனி' எனும் தொனிப் பொருளிலான மாபெரும் நடைபவனியொன்று, இன்று (09) முற்பகல் 08.30 மணியளவில் நடைபெற்றது.
மேற்படி பாடசாலைக்கு அருகாமையிலுள்ள கருணாகரப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் இருந்து ஆரம்பமான இந்த நடைபவனி, கே.கே. எஸ் வீதியூடாக மல்லாகம் சந்தியைச் சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து மல்லாகம் - நவக்கிரி வீதியூடாக பெரியசங்கத்தடியைச் சென்றடைந்து, மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
மேற்படி பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நடைபவனியில், பாடசாலையின் அதிபர் கந்தசாமி கெங்காதரமூர்த்தி, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கிராமத்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .