2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

நெசவுசாலை கட்டடத்தை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

செல்வநாயகம் கபிலன்   / 2017 செப்டெம்பர் 10 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சுவேலி இராச வீதியில் அமைந்துள்ள நெசவுசாலை கட்டடத்தை விடுவிக்குமாறு கோரி அப்பகுதி மக்கள், மதஸ்தலம் ஒன்றுக்கு எதிராக, ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (10) காலை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த நெசவுசாலை யுத்தத்தின் பின் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பின்னர் குறித்த கட்டடத்தில் மதஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மதஸ்தலத்தால், சுற்றுச் சூழலில் அதிகளவு சத்தத்துடன் பிரார்தனை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மதஸ்தலத்துக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது குறித்த மதஸ்தலம் அமைந்துள்ள நெசவுசாலையை, கைத்தொழில் அமைச்சு பொறுப்பெடுத்து மீளவும் நடத்தவேண்டும் என்றும் சுற்றுச்சூழலில் இடம்பெறும் ஒலி மாசடைதலை கட்டுப்படுத்துவதற்காக, அமைந்துள்ள மதஸ்தலம் அகற்றப்பட வேண்டும் எனக் கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கைகளில் பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

‘’பொதுச் சொத்தை தனி மனிதன் கையகப்படுத்துவதா?’’, ‘’சமயத்தின் பெயரில் சர்வதிகாரமா?”, “அச்சுவெலி மக்களை ஏமாளியாக்காதே நெசவு நிலையத்தினை மீளவும் இயங்க வழிவிடு” போன்ற வசனங்களை ஏந்தி இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X