2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை

Niroshini   / 2016 ஜனவரி 26 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காயின் கொக்காவில், புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம், தேராங்கண்டல் வழியாக துணுக்காய் நகரத்துக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தரும்படி துணுக்காய் பிரதேச செயலாளர் சி.குணபாலன், திங்கட்கிழமை (25) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

மீள்குடியேற்றம் நடைபெற்ற காலத்திலிருந்து மேற்படி கிராமங்களுக்கான போக்குவரத்துகள் இடம்பெறாததன் காரணமாக, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புத்துவெட்டுவானில் 80 குடும்பங்களும் பழையமுறிகண்டியில் 40 குடும்பங்களும் ஐயன்கன்குளத்தில் 210 குடும்பங்களும் போக்குவரத்து வசதிகளின்றி கடந்த 6 ஆண்டுகளாக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X