2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

புங்குடுதீவு மாணவி கொலை: மேலுமொரு சந்தேகநபர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 04 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் நேற்று வியாழக்கிழமை (03) மேலுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்படார் என பொலிஸார் கூறினார்.

இதன்போது, மேலும் ஒருவரைக் கைதுசெய்யவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

புங்குடுதீவு மாணவியை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை வழக்கில் ஏற்கெனவே 10 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டனர்.

கொலை வழக்கின் சான்றுப் பொருட்கள் அறிக்கைகளையும் விசாரணை அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்குமாறு ஊர்காற்றுறை நீதவான் கடந்த 19ஆம் திகதி வழக்குத் தவணையில் குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன் பின்னர், கடந்த 29ஆம் திகதி இரண்டு சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை (03) 11ஆவது சந்தேகநபரைக் கைதுசெய்து, அவரை குற்றப் புலனாய்வு பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X