2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பெட்டி, படுக்கையுடன் வருவோரை சந்திப்பதில்லை: ஐங்கரநேசன்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

என்னைச் சந்திக்க பெட்டி, படுக்கையுடன் வருவதை நான் அனுமதிப்பதில்லை யெனவும், இதுவரையில் அவ்வாறு யாரும் வந்ததில்லையென வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (25) நடைபெற்ற போது, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் 8 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரiணை, சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, உரையாற்றிய ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயூப் அஸ்மின், 'சுன்னாகம் பகுதியில் கழிவொயில் கலந்த பிரச்சினை தொடர்பில், அப்பகுதியில் அமைந்திருந்த இலங்கை மின்சார சபைக்கு மின்சாரம் வழங்கும் நிறுவனத்தின் அதிகாரிகள், வடமாகாண விவசாய அமைச்சரை 2 பெட்டிகளுடன் சந்தித்தார் என்ற தகவல் உள்ளது. அது தொடர்பில் விவசாய அமைச்சர் எனக்கு பதிலளிக்க வேண்டும்' என்று கோரினார். அதற்கு பதிலளிக்கையிலேயே விவசாய அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X