2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பூட்டிய அறையில் இருந்து சிறுமியின் சடலம் மீட்பு

George   / 2016 நவம்பர் 15 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அகிலேஸ்வரன் அகிலா (வயது14) என்றச் சிறுமியின் சடலம், திங்கட்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற இளவாலை பொலிஸார், சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த சிறுமி, சுகவீனமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற போது, கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில், சிறுமியின் தந்தை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X