2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பாடசாலைக்குச் செல்லாத 30 மாணவர்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.அரசரட்ணம்

வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தில் பாடசாலைக்குச் செல்லாத 30 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச செயலர் யசோதா உதயகுமார், இன்று வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வலிகாமம் தென்மேற்குப் பிரதேச செயலகம், இளவாலை மாசீசன்கூடல் பிரதேசத்தில் 172 வீடுகளில் நேற்று வியாழக்கிழமை சோதனைகளை மேற்கொண்டது.

பிரதேச செயலாளர் தலைமையில், கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது பாடசாலைக்குச் செல்லாத 30 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் பாடசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X