Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
பாடசாலை மீள ஆரம்பித்து நடப்பது தொடர்பில் மனித உரிமை ஆர்வலர்கள் திருப்தி கொண்டுள்ளதாக உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் திருமதி பற்ரீசியா சுனித்தா தெரிவித்தார்.
பாடசாலை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (13) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் அவர் கருத்துக்கூறுகையில்,
உடுவில் மகளிர் கல்லூரியில் 1,200 மாணவிகள் கல்வி கற்கின்றனர். இன்று (நேற்று) பாடசாலைக்கு 650 மாணவர்கள் வருகை தந்துள்ளனர். கல்விச் செயற்பாடு ஒழுங்காக நடைபெறுகின்றது. மனித உரிமை ஆர்வலர்கள் இன்று (நேற்று) பாடசாலைக்கு வருகை தந்தனர். அவர்களை வகுப்புக்களுக்கு அழைத்துச் சென்று மாணவிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதித்தோம். பாடசாலையில் சுமூகமான நிலையுள்ளதாகவும், தங்களுக்கு அது திருப்பதியாகவுள்ளதாக கூறினர். பிள்ளைகள் எந்தப் பிரச்சினைகளுமின்றி கல்வியைத் தொடர்கின்றனர். எந்தவொரு பிள்ளையும் பாதிப்பதற்கு இடமளிக்கமாட்டோம்.
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் கல்வியைச் சிறப்பாக தொடர்வதற்கு பாடசாலைக்கு ஒழுங்காக அனுப்ப வேண்டும் என்றார்.
56 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
6 hours ago