Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் 1998ஆம் ஆண்டு 50ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட சரத்துக்கு அமைவாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
எனவே, மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்துக் கிளையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 04ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களின் உரிமையாளர்கள் வாகன பதிவு புத்தகம், தேசிய அடையாள அட்டை (உரிமையாளர், சாரதி, நடத்துனர்), சாரதி அனுமதிப்பத்திரம் (சாரதிக்கு மட்டும்), காப்புறுதிப் பத்திரம் மற்றும் வரிப்பத்திரம் ஆகிய ஆவணங்களுடன் சமூகமளித்து தமது வாகனங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
பதிவுக்குட்படுத்தாத வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
16 minute ago
17 minute ago