2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பாடசாலை மாணவர்கள் மூவர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 15 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறைப் பகுதியிலுள்ள கைபேசி விற்பனை நிலையத்தினை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்ள் மூவரை, நேற்று வியாழக்கிழமை (14) வல்வெட்டித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான மூவரில் இருவர், வல்வெட்டிப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர், கம்பர்மலை பகுதியினை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் என பொலிஸார் கூறினர்.

கடந்த வருடம் ஜூலை மாதம் குறித்த கைபேசி விற்பனை நிலையத்தினை உடைத்து; 2½ இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடியிருந்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X