2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பாணுக்குள் கஞ்சா வைத்தவர் கைது

George   / 2016 ஜனவரி 23 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதிக்கு வழங்குவதற்காக பாணுக்குள் மறைத்து வைத்தபடி கஞ்சா கொண்டு சென்ற நபரை வெள்ளிக்கிழமை (22) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறைச்சாலையிலுள்ள கைதியைப் பார்க்கச் சென்ற சந்தேகநபர், அவருக்காக கொண்டு சென்ற பாணுக்குள் 30 கிராம் கஞ்சாவை மறைத்து எடுத்துச் சென்ற போதே, சிறைச்சாலை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

மானிப்பாய் பூங்காவாடி பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X