2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பெண்கள் அரசியலுக்கு அதிகமாக வாருங்கள்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதார முறையில் அரசியலிலும் பெண்களின் பங்களிப்பானது அதிகரிக்கப்படவேண்டும் என யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

தேர்தல்களின் போது, தமிழ் பெண்கள் சார்ந்த பிரதிநிதிகள் மிகக்குறைவாகக் காணப்படுகின்றனர். அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படவேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் இணைந்து, பெண்கள் அரசியலில் தங்கள் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X