2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பெண்களுக்கு தற்பாதுகாப்பு பயிற்சி நெறி

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-காயத்திரி விக்கினேஸ்வரன்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மற்றும் வசந்தம் விசன் ட்ரஸ்ட் அமைப்பும் இணைந்து யாழ். மாவட்டத்தில் கிராம மட்ட பெண்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சிநெறியை, புதன்கிழமை (02) காலை 8.30 மணிக்கு யாழ். கன்னாதிட்டி காளி கோவில் மண்டபத்தில் ஏற்பாடுசெய்திருந்தன.

குறித்த பயிற்சி நெறிக்காக, சிங்கப்பூரில் இருந்து பயிற்றுவிப்பாளர்கள் வரவழைக்கபட்டுள்ளதுடன் பயிற்சி நெறிகள், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நாளை வரை நடைபெறுகின்றது.

இப்பயிற்சி நெறிக்கு, பிரதேச செயலகங்களிலிருந்து மகளிர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் கிராமமட்ட பொது அமைப்புக்களில் இருந்து பெண் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X