2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பெண்ணின் தாலி அறுப்பு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

தாவடி, பத்திரகாளி அம்மன் கோயில் பகுதியில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் 11 பவுண் தாலிக்கொடி, நேற்று திங்கட்கிழமை (11) இரவு அறுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த நபரொருவர், தாலியை அறுத்துச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X