Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 11 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களைத் தலைமைத்துவங்களாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு உரிய பொறிமுறை உடனடித் தேவையாக உள்ளதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், கடந்த கால யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கணவன்மாரின் இழப்புகளையடுத்து பெண்கள் தலைமைத்துவங்களை ஏற்கக் கூடியதான குடும்பங்கள் பல ஆயிரக் கணக்கில் வாழ்ந்து வருகின்றன.
உரிய தொழில் வாய்ப்புக்கள், நிவாரணங்கள் இன்றிய நிலையில் இக்குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றன.
எனவே, இக்குடும்பங்களின் வாழ்வாதாம் குறித்து உரிய வகையிலான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது. இதனை அவதானத்தில் எடுத்து, இதற்கான நடவடிக்கையை எடுக்க முன்வரவும் என வலியுறுத்தினார்.
9 hours ago
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
01 Oct 2025
01 Oct 2025