2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு நிதி ஒதுக்கீடு

Niroshini   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடக்கு மாகாண  சபையினால் நெல்சீப் திட்டத்தின் ஊடாக புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழுள்ள புதுக்குடியிருப்பு சந்தை வளாகத்தில் நீர்த்தாங்கியொன்று அமைப்பதற்கும் சந்தை உள்ளக வீதியை புனரமைப்பதற்காகவும் மூங்கிலாறு கிராமத்திலுள்ள திலீபன் வீதியை புனரமைப்பு செய்வதற்கும்  இந்நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வேலைகள் அனைத்தும் எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் நிறைவு பெறுமென புதுக்குடியிருப்பு பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X