2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 26 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

இலங்கை போக்குவரத்து கிளிநொச்சி சாலைக்கு  சொந்தமான பஸ்ஸை வழி மறித்து முல்லை தனியார் பஸ் உரிமையாளர்கள், இன்று(25), புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 கிளிநொச்சி சாலையில் இருந்து ஆரம்பிக்கும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேரக்கட்டுப்பாடுகள் இன்றி முல்லைத்தீவு சாலைக்கு செல்லாது புதுக்குடியிருப்பில் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கின்றது. இதனால், தாம் பல்வேறு இன்னல்களை அனுபவிப்பதாக முல்லைமாவட்ட தனியார் பேரூந்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனை கண்டித்து குறித்த பேருந்தை  புதுக்குடியிருப்பில் வழிமறித்து  முல்லை மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாடம் ஒன்றை முன்னெடுத்தனர் .

இதனால், முல்லைத்தீவு பரந்தன் வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்த புதுக்குடியிருப்பு  பொலிஸார்  சம்மந்தப்பட்ட தரப்பினருடன்  கலந்துரையாடலை மேற்கொண்டு நிலமையைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதையடுத்து. தனியார் பேருந்து உரிமையாளர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததோடு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினருக்கும் முறைப்பாடொன்றை பதிவு செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X