2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புதுக்குடியிருப்பில் 256 வீடுகள்

George   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ், மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன் 241 வீடுகளும் இந்தியாவில் இருந்து மீளத்திரும்பியவர்களுக்கான வீட்டுத்திட்டத்தில் 15 வீடுகளும் அமைக்கப்;பட்டு வருவதாக பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை தவிர, யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து புதுக்குயிருப்பு பிரதேச செயலார் பிரிவின் கீழ், 7,198 புதிய வீடுகள் பல்வேறு நிதி நிறுவனங்களின் உதவியுடன் அமைக்கப்;பட்டுள்ளதுடன், பகுதியளவில் சேதமடைந்த 473 வீடுகளும் புனரமைக்கப்பட்டுள்ளன.

இவற்றைவிட, 4,599 குடும்பங்களுக்கு புதிய வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்த 551 வீடுகளையும் புனரமைக்க வேண்டியுள்ளதாக அந்தத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X