2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பொதுக்கிணற்றை புனரமைத்து தாருங்கள்

Gavitha   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, முள்ளியவளை செங்குந்தா வீதியில் சேதமடைந்;து காணப்படும் பொதுக் கிணற்றை புனரமைத்து தருமாறு, குறித்த பகுதியின் மக்கள் மீண்டும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முள்ளியவளை உப அலுவலகத்தின் கீழுள்ள முள்ளியவளை கிழக்கு செங்குந்தா வீதியில்,  சுமார் 50 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த பொதுக்கிணறு ஒன்று உள்ளது. எனினும் கடந்த பருவ மழையின் போது, குறித்த கிணறு கடுமையாக சேதமடைந்தது.

குறித்த கிணற்றை புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்;கள் உரிய அதிகாரிகளை பல தடவைகள் கோரிய போதும் இன்றுவரை அந்தக் கிணறு புனரமைக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஆபத்தான நிலையில் இக்கிணறு காணப்படுவதனால்,  கால்நடைகள், விலங்குகள் கிணற்றுக்குள் விழுந்து விடும் நிலை காணப்படுவதாகவும் எனவே இதனை புனரமைத்துத் தருமாறும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X