2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பாதுகாப்பற்ற கடவைகளின் வீதிகளை நீக்குவதற்கு மக்கள் எதிர்ப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற கடவைகள் உள்ள வீதிகளை நீக்குவதற்கு புகையிரதத் திணைக்களம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று புதன்கிழமை (03) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதனால், வீதிகளை நீக்குவதற்காக அநுராபுரத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
வடக்கின் புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சுமார் 240 புகையிரதக் கடவைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 10 சதவீதமானவை புகையிரதக் கடவைகள் மாத்திரமே பாதுகாப்பான கடவைகள் என்பதுடன் ஏனையவை பாதுகாப்பற்ற கடவைகளாக இருந்தன.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாதுகாப்பற்ற கடவைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டமையால், அவற்றை பாதுகாப்பான கடவைகளாக மாற்றுமாறு புகையிரதத் திணைக்களத்துக்கு, மக்கள் கோரிக்கை முன்வைத்து கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இருந்தும், 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த கடவைகளை விட தற்போது கடவைகள் அதிகமாகவுள்ளதாகத் தெரிவித்த திணைக்களம், புதிதாக உருவாக்கப்பட்ட வீதிகளின் கடவைகளை அகற்றுவதற்கு தீர்மானித்தது.

அந்த தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், அநுராதபுரத்திலிருந்து குழுவொன்று இன்று புதன்கிழமை கிளிநொச்சிக்கு சென்று, பாதுகாப்பற்ற கடவைகள் சிலவற்றை அகற்ற முற்பட்டது. இதன்போது, அங்கு கூடிய அப்பகுதி மக்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்து, வீதிகளை நீக்கும் நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

புகையிரதப் பாதையின் மேல் சென்றுவரக்கூடிய வகையில் போடப்பட்டிருந்த கட்டுக்களை அகற்றி வாகனங்கள் புகையிரதப் பாதையைக் கடந்து பயணிக்க முடியாதவாறு மாற்றும் நடவடிக்கையை இந்தக் குழு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X