2025 ஜூலை 23, புதன்கிழமை

பாதுகாப்பற்ற கடவைகளை பாதுகாப்பாக மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாதுகாப்பற்ற கடவைகளை பாதுகாப்புடையதாக மாற்றக் கோரி நீதிக்கும் ஜனநாயகத்துக்குமான மக்கள் அமைப்பால் கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்குக்கான ரயில் சேவையானது மீள ஆரம்பிக்கப்பட்டப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் ஏற்பட்ட விபத்துக்களில் இதுவரையில் ஒரு குழந்தை உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மைக் காலங்களில் மாதத்துக்கு ஒரு உயிரிழப்பு என இடம்பெற்று வருகின்றது.

இதனைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பற்ற கடவைகளை பாதுகாப்பான கடவைகளாக மாற்றுமாறு கோரி, இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .