2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

புத்தாண்டு கொண்டாட்டம்: பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு

George   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

எதிர்வரும் தமிழ் - சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் மாணவர்களுக்கிடையே பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் கலை நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை (07) நடத்தப்பட்டன.

அதிபர் தி.மோகனபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளை பாடசாலை ஆசிரியர்கள் ஒழுங்கமைத்திருந்தனர்.

பாரம்பரிய விளையாட்டு என்ற ரீதியில் மாணவ, மாணவிகளுக்கிடையிலான கிளித்தட்டு போட்டி இடம்பெற்றது. மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் இது வாழைப்பழ கிளித்தட்டாக இடம்பெற்றது. (கிளித்தட்டில் ஒரு பழம் எடுக்கும் அணி வாழைப்பழங்களை பிடுங்கி உண்பது வாழைப்பழ கிளித்தட்டு எனப்படும்)

ஆண், பெண் இரு அணிகளும் தமக்கிடையே மிகவும் சுறுசுறுப்பாக இந்த விளையாட்டுக்களில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து புத்தாண்டை வரவேற்கும் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன்போது மாணவ, மாணவியர் பாட்டு, பேச்சு, கவிதை உள்ளிட்ட கலை நிகழ்வுகளை நிகழ்த்தியிருந்தனர்.

பாடசாலைகள் முதலாம் தவணைப் பரீட்சை நிறைவடைந்து விடுமுறைக்காக இன்று வெள்ளிக்கிழமை மூடப்படவுள்ள நிலையில் நேற்றைய தினம் புதுவருட நிகழ்வுகளைக் கொண்டாடுமாறு கல்வியமைச்சு விடுத்த சுற்று நிருபத்துக்கு அமைய இந்த நிகழ்வுகள் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X