2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புத்துவெட்டுவானில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வுகள்

Kogilavani   / 2016 நவம்பர் 11 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

'முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள புத்துவெட்டுவான் கிராமத்தில், தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த  உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான  மணல், தினமும்  மாலை 6 மணிக்கு டிப்பர் வாகனங்களில் எந்தவித அனுமதிப்பத்திரமின்றியும் கொண்டுச் செல்லப்படுகின்றன.

குறிப்பாக புத்துவெட்டுவான் கிராம அபிவிருத்திச்சங்க நிர்வாகத்தில் உள்ளவர்களின் துணையுடன் மேற்படி சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனைக்கட்டப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்;டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X