2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

புத்தக கொள்வனவுக்கு கொடுப்பனவு இன்னுமில்லை

Princiya Dixci   / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பிள்ளைகளுடைய புத்தகக் கொள்வனவுக்கு வழங்கப்படும் 4,000 ரூபாய் இதுவரை காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி மாதம் ஆரம்பத்தில் வழங்கப்படும் இத்தொகை, இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

ஏனைய பிரதேசங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், இந்த நிவாரணக் கொடுப்பனவைப் பெற்றுள்ள போதும் இதுவரை காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் உள்ள கணக்கு கிளையினால் வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தியோகத்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X