Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 21 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில், வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் காணிகளில் 1,739.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் கடந்த 25 வருடங்களாக இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வலிகாமம் வடக்கில் 638 ஏக்கர்களும், வலிகாமம் கிழக்கில் 400 ஏக்கர்களும் என 1,038 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.
தொடர்ந்து 201 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி வலிகாமம் வடக்கில் 479.7 ஏக்கர் காணிகளும் வலிகாமம் கிழக்கில் 221.8 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டன.
2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேறுவதற்கு 1,320 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்த அதேவேளை, டிசெம்பர் மாதம் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக்குடியேறுவதற்கு 632 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago