Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 14 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பிரதேச சபையின் புதிய செயலாளராக யாழ்ப்பாணம், வரணியைச் சேர்ந்த இராசையா தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், தனது கடமைகளை திங்கட்கிழமை(11) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 17 வருடங்கள் அரச சேவை அனுபவத்தை கொண்ட இவர் பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம், பிரதி விவசாயப் பணிப்பாளர்(விரிவாக்கம்) அலுவலகம், வலயக்கல்வி அலுவலகம் என்பவற்றில் கடமையாற்றியுள்ளதுடன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா என பல மாவட்டங்களிலும் கடமையாற்றியுள்ளார்.
இதேவேளை, முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 1 , 2 என பதவி உயர்வு பெற்ற இவர், அண்மையில் நடைபெற்ற முகாமைத்தவ உதவியாளர் சேவையின் அதி சிறப்பு தரத்துக்கு பதவி உயர்வு பெற்றதன் காரணமாக வட மாகாண சபையால் மன்னார் பிரதேச சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago