2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பூநகரியில் 77 கிலோமீற்றர் வீதி புனரமைக்க வேண்டும்

Niroshini   / 2016 ஜனவரி 27 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில், வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 77 கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்பட வேண்டியுள்ளதாக பூநகரிப் பிரதேச செயலாளர் ச.கிருஸ்ணேந்திரன், செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார்.

இதற்கமைய, பூநகரியின் கௌதாரிமுனைக்கான 17 கிலோமீற்றர் வீதியும் வலைப்பாடு, கிராஞ்சி, தம்பிராய், கொல்லங்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கான வீதிகளும் புனரமைக்கப்பட வேண்டியுள்ளது.

வீதி புனரமைக்கப்படாதுள்ளதால், கௌதாரிமுனையில் 117 குடும்பங்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இதேபோன்று, வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1,000 வரையான குடும்பங்கள் வீதி புனரமைக்கப்படாமையினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X