2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பின்தங்கிய கிராமங்களுக்கான போக்குவரத்துச்சேவைகள் மேற்கொள்ளப்படும்

Niroshini   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண போக்குவரத்து சேவைகளை ஒழுங்குபடுத்;துவதற்கான இணைந்த நேர அட்டவணை உரிய அதிகாரிகளின் கையொப்பங்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை கிடைக்கப்பெற்றதும் அதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பின்தங்கிய கிராமங்களுக்கான போக்குவரத்துச் சேவைகளும் மேற்கொள்ளப்படும் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் சனிக்கிழமை (30) தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டு அதனை அமுல்படுத்தவுள்ளோம். தற்போது வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் ஒன்றியத்தினால் ஒப்புதல் கையொப்பம் பெறப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண நிறைவேற்;று முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர் மற்றும் இலங்கைக்கான நிறைவேற்று முகாமையாளர்களின் ஒப்பமிடுவதற்கு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அது இன்னும் ஓரிரு தினங்களில் எமக்கு கிடைக்கும் என நம்புகின்றோம். அதன் பின்னர் ஐந்து மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், எனது அமைச்சின் செயலாளர்,  நானும் கையொப்பமிட்டு மே மாதம் முதலாம் திகதி அமுல்படுத்துவதாக இருந்தோம். கொழும்பில் கையொப்பமிடுவது சற்று தாமதமடைந்;துள்ளது.

எனவே எதிர்வரும் 4 ஆம் திகதி அதை அனுப்பி வைப்பதாக இலங்கை நிறைவேற்று முகாமையாளர் தெரிவித்திருக்கின்றார். அது கிடைக்கப்பெற்றதும் இதனை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது. அத்துடன் பின் தங்கிய கிராமங்களுக்கான போக்குவரத்துச்சேவைகளும் ஒழுங்குபடுத்தப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X