2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வு பெற்றவர்கள் மற்றும் பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் எதிர்வரும் 07ஆம் திகதி கிளிநொச்சி பழைய மாவட்டச் செயலகத்துக்கு அருகாமையில் உள்ள கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு பெற்றவர்கள் மற்றும் பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றவுள்ளது.

மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் 500 மூக்குக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கிளிநொச்சி முல்லைத்தீவு  மாவட்டங்களில் உள்ள புனர்வாழ்வு பெற்றவர்கள் மற்றும் பொது மக்களை கலந்து பயன்பெற்றுக்கொள்ளுமாறும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X