2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

George   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் அமைந்துள்ள சென்ஜேம்ஸ் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் 5.5 மில்லியன் ரூபாயில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   

ஊர் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் வயாவிளான் மக்கள் ஆகியோரிடம் இருந்து 5 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் கூரை வேலைப்பாடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.   

யுத்தம் காரணமாக சேதமடைந்த தேவாலயத்தின் சொரூபங்கள் மீண்டும் பிரதிஸ்டை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இதேவளை, இந்து, கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சு 5 இலட்சம் ரூபாய் தருவதாக உறுதியளித்துள்ளதுடன் அதில் 1 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாயை முதற்கட்டமாக வழங்கியுள்ளது.   

உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்த இந்த ஆலயம், கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X