2025 ஜூலை 02, புதன்கிழமை

பியர் போத்தலால் மாணவர்களை தாக்கியவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் நகரப் பகுதியில் மாணவர்கள் இருவரை, பியர் போத்தலால் வெட்டிய சந்தேகநபர்களில் பிரதான சந்தேகநபரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்று திங்கட்கிழமை (26) உத்தரவிட்டார்.

கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் படுகாயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார், மூன்று சந்தேகநபர்களை ஏற்கெனவே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குப்பிளான் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பிரதான சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் தனது சட்டத்தரணியூடாக நேற்று (26) நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு பிணை வழங்க பொலிஸார் எதிர்ப்புத் தெரிவித்தமையடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .