Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூலை 02 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண, தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு திடீர் விஜயம் ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை (01) மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பருத்தித்துறை, அச்சுவேலி, நெல்லியடி மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.
தற்போது யாழ்.மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக சிவில் சமூகங்கத்தினரால் பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தேவையான ஆலோசனைகளை பிரதி பொலிஸ் மா அதிபர் வழங்கினர்.
மேலும், பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவ்வாறு தொடர்பினை பேணுவது? குற்றங்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் உறவு பொலிஸாருக்கு எவ்வாறு தேவை? என்பது தொடர்பில் அறிவுத்தப்பட்டது.
இவ்விஜயத்தின் போது பிராந்தியத்துக்குட்பட்ட பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.ஆர்.ரஞ்சித் மாசிங்க மற்றும் உதவிபொலிஸ் அத்தியட்சகர் சீ.வீ.மெதவெல ஆகியோர் உடனிருந்தனர்.
10 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago