2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பாரம்பரிய உணவுத் திருவிழா

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ். மாவட்ட கலாசார அதிகார சபையினால் நடத்தப்படவுள்ள பாரம்பரிய உணவுத் திருவிழாவுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சுயதொழில் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் யாழ். மாவட்டத்தின் பாரம்பரிய உணவுப் பொருட்களினையும் விற்பனை செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு தங்கள் உற்பத்திகளை காட்சிப்படுத்த விரும்புபவர்கள் மாவட்ட கலாசார உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்று விண்ணப்பிக்க முடியும்.

எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி யாழ். பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த உணவுத் திருவிழாவில் பங்குகொள்ள விரும்புபவர்கள் எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் விண்ணப்பப்படிவங்களை கலாசார உத்தியோகத்தர் எஸ்.தமிழ்மாறனிடம் ஒப்படைக்கும்படி யாழ் - பிரதேச செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X