2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பிற்பாக்கெட் அடித்த பெண் 15 நிமிடங்களில் கைது

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய சந்தேகநபரான குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை, 15 நிமிடங்களில் நேற்று திங்கட்கிழமை (11) மாலை பொலிஸார் கைது செய்தனர்.

புதுவருட கொள்வனவை முடித்துவிட்டு நண்பிக்காக மேற்படி பெண் காத்திருந்த வேளை, பெண்ணின் பின்பக்கமாகச் சென்ற சந்தேகநபரான பெண், கைப்பையைத் திறந்து பணத்தை திருடியுள்ளார்.

அதன் பின்னர், சந்தேகநபரான பெண் தடுமாற்றமடைந்த போது, அங்கு சிவில் உடையில் கடமையில் இருந்த பொலிஸார், சந்தேகநபரான பெண்ணை விசாரணை செய்த போது, பணம் திருடப்பட்டமை தெரியவந்தது.

உடனடியாக அவரைக் கைது செய்த பொலிஸார் பணத்தையும் மீட்டனர்.

மேற்படி பெண்ணின் கணவர் திருட்டுக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X