2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பெறாமகள் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழியசிறை

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பெறாமகள் முறையிலான 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 5 வருடம் ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், உத்தரவிட்டார்.

மேலும் 3 குற்றச்சாட்டுக்களுக்கு, தலா 3 ஆயிரம் அபராதம் செலுத்துவதுடன், அதனை செய்யாவிட்டால், ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 ஆயிரம் நட்டஈடு வழங்குமாறும் அவ்வாறு நட்டஈடு வழங்க தவறும் பட்சத்தில், 18 மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 15 வயது சிறுமியை மூன்று தடவைகளுக்கு மேல் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .