Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
களேஸ் ஒவ் கரீஜ் நிதியத்தினரின் ஏற்பாட்டில் பருத்தித்துறையிலிருந்து தெற்குக்கான நடைபயணம் வியாழக்கிழமை (06) காலை ஆரம்பமாகியது.
காலி மாவட்டத்திலுள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கு நிதி சேரிப்பதற்காக இந்த நடைபவனி நடத்தப்படுகின்றது.
இந்த நடைபவனியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்த நடைபவனி தொடர்பில் இவர்கள் இருவரும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு புதன்கிழமை (05) விளக்கமளித்தனர். தொடர்ந்து நடைபவனி தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான விளக்கமளிப்பை தெல்லிப்பழை வைத்தியசாலையில் புதன்கிழமை (05) நடத்தினர்.
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கு இவ்வாறான நடைபவனியொன்றின் மூலம் நிதி சேகரிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் இந்த நடைபவனி நடத்தப்படுகின்றது.
பருத்தித்துறையிலிருந்து ஆரம்பமாகும் நடைபவனி, வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை வந்தடைகின்றது. தொடர்ந்து. தெற்கிற்கான பயணத்தை அங்கிருந்து தொடர்கின்றது.
54 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago
6 hours ago