Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் மருத்துவ கழகம் என பொய்யான ஆவணம் தயாரித்து பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலித்த கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இளைஞனுக்கு 8 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாதகால சிறைத்தண்டனை விதித்து மல்லாகம் மாவட்ட மேலதிக நீதிவான் ரீ.கருணாகரன் வியாழக்கிழமை (31) தீர்ப்பளித்தார்.
நீர்வேலி மற்றும் சிறுப்பிட்டி மத்தி பகுதியிலுள்ள வீடுகளுக்குச் கடந்த ஜனவரி 4 ஆம் திகதி சென்ற மேற்படி இளைஞன், யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் மருத்துவ கழகம் என பொய்யான ஆவணங்களைக் காட்டி பண வசூலிப்பில் ஈடுபட்டார்.
இளைஞன் மீது சந்தேகம் கொண்ட சில பொதுமக்கள் ஆவணங்களை வாங்கி பரிசீலித்து பார்த்த போது, அவை போலியென்பது தெரியவந்தது. இளைஞனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் நையப்புடைத்த பின்னர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இளைஞன், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தீர்ப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
20 minute ago
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
7 hours ago
9 hours ago