2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

புலிகள் இருக்கும் போது யானைகள் தொல்லை இல்லை

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவில்லையென வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் எம்.அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது. இதன்போது, வவுனியா வடக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களில் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண சபை கோர வேண்டும் என்ற பிரேரணையை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கொண்டு வந்தார்.

இதனை வழிமொழிந்து உரையாற்றும் போதே அன்ரனி ஜெகநாதன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

தென்னிலங்கையில் மதம் பிடித்த யானைகளை, வனஜீவராணி திணைக்களத்தினர் பிடித்து அவற்றை வடமாகாணத்திலுள்ள காடுகளில் விடுகின்றனர். அவ்வாறான யானைகளே கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றது.

மன்னார் சிலாவத்துறையில் மதம் பிடித்த 25 காட்டு யானைகளை வனஜீவராசித் திணைக்களத்தினர் கொண்டு வந்து விட்டுள்ளதாக உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

இதனைக் தடுக்க வடமாகாண சபை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X