2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள்

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் திங்கட்கிழமை (15) தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மேற்படி ஆலயத்தின் திருவிழா எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த முறை சுமார் 1,000 பேர் திருவிழாவுக்கு வருகை தந்தனர்.

ஆனால், இம்முறை அதனைவிட அதிகமானவர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகை தரும் மக்களுக்கான குடிநீர், மலசலகூட வசதிகள் என்பன மாவட்டச் செயலகம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும்,படகுப் போக்குவரத்துச் சேவையில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் ஈடுபடவுள்ளனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X