Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 29 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்துக்குட்பட்ட புலோப்பளை வீதி, இன்றுவரை புனரமைக்கப்படாமையினால் ஏழுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கிளிநொச்சி ஏ-9 வீதி பளை நகரத்திலிருந்து புலோப்பளை கிழக்கு புலோப்பளை மேற்கு அல்லிப்பளை, செல்வபுரம், கச்சார்வெளி, அறந்திநகர், பளை நகர் ஆகிய கிராமங்;களுக்குச் செல்லும் 3 கிலோ மீற்றர் நீளமான வீதி, இன்றுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதுடன், குறித்த வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால், குறித்த வீதியை பயன்படுத்தும் மாணவர்கள், தொழிலாளர்கள் தத்தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான இந்த வீதியை புனரமைத்துத்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Jul 2025