2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தரை மோதிய சாரதிக்கு பிணை

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

உழவு இயந்திரத்தில் பொலிஸ் உத்தியோகத்தரை மோதி காயத்தை ஏற்படுத்திய உழவு இயந்திர சாரதியை, 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் செவ்வாய்க்கிழமை (19) அனுமதியளித்தார்.

அத்துடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

திங்கட்கிழமை(18), சுன்னாகம் பகுதியில், மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை உழவு இயந்திரம் மோதியது.

இச் சம்பவத்தில், பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X