2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொலிஸாரைக் கண்டு பீதியடைந்த கசிப்பு விற்பனையாளர்கள்

Niroshini   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

கானுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர் பொலிஸ் ஜீப் வண்டியைக் கண்டதும் கான் மற்றும் மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு காட்டுக்குள் தப்பியோடிய சம்பவமொன்று வடமராட்சி முள்ளிப் பகுதியில் வியாழக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது.

வரணி – நெல்லியடி வீதியால் கான் ஒன்றுடன் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தவர்கள், முள்ளிச் சந்திப் பகுதியில் பொலிஸ் ஜீப்பைக் கண்டதும் கானை பற்றைக்குள் எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளையும் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது, 15 லீற்றர் கசிப்பு, கான், மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X