2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பொலிஸாரைக் கண்டதும் வீதியில் வீசப்பட்ட பாலை மரக்குற்றிகள் மீட்பு

Princiya Dixci   / 2016 ஜனவரி 27 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பளைப் பகுதியில் சட்டவிரோதமாக எட்டு பாலை மரக்குற்றிகளை ஏற்றி வந்த வாகனம், பொலிஸாரை கண்டதும் குற்றிகளை வீதியில் வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம், நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சிப் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் வாகனமொன்றில் பாலை மரக்குற்றிகள் எடுத்து வருவதாக பளைப் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது.

வீதியில் சிவில் உடையில் பொலிஸார் நிற்பதனைக் கண்ட கடத்தல்காரர்கள் ஏற்றி வந்த குற்றிகளை வீதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கடத்தி வந்த பாலை மரக்குற்றிகளின் பெறுமதி 2 இலட்சத்து 75 ஆயிரம் என பளைப் பொலிஸார் கூறினர். 

மீட்கப்பட்ட சான்றுப்பொருளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X