2025 ஜூலை 19, சனிக்கிழமை

பொலிஸாரின் ஒத்துழைப்புடனேயே மாடுகள் வெட்டப்படுகின்றன

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பொதுச்சுகாதார பரிசோதகரின் அனுமதி இல்லாமல், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சில இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதாக பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வல்வெட்டித்துறை நகர சபை , பருத்தித்துறை பிரதேச சபை பகுதிகளில் மாடு இறைச்சியாக்குவதற்கான அனுமதி வழங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட ஞானசாரியார் பகுதியில் உள்ள கொல்களன் போதிய வசதிகளின்றி காணப்படுகின்றது

எனினும் வடமராட்சி பகுதியில் தற்போது ஞானசாரியர் கொல்களன் ஒன்றிலேயே மாடுகள் அறுக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனையும் மீறி துன்னாலை பகுதிகளில் உள்ள பற்றை பகுதிகளில் மாடுகள் இறைச்சியாக்காக அறுக்கப்பட்டு வருகின்றன. இச்செயற்பாட்டை பொலிஸார் ஓரளவு கட்டுப்படுத்த முயன்றாலும், சில உயர் அதிகாரிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இவ்வருடம் வல்வெட்டித்துறை நகர சபை, பருத்தித்துறை பிரதேச சபைகளுக்குட்பட்ட இறைச்சிக் கடைகளுக்கான கேள்விகோரலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இறைச்சி வியாபாரிகள் இச் சபைகளின் நிர்வகிப்பில் இருந்த கடைகளை கொள்வனவு செய்யவில்லை.

கரவெட்டி பிரதேச சபையின் கீழ் உள்ள ஞானசாரியார் கொல்களனில் கடந்த வருடம் 1,100 மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்பட்டன.

நாள் ஒன்றுக்கு 3 மாடுகள் வெட்ட அனுமதிக்கப்படும் நிலையில், கரவெட்டி பிரதேச சபையில் உள்ள உணவகங்கள், மற்றும் இறைச்சி கடைகளுக்கே போதிய இறைச்சி வழங்கமுடியாமல் உள்ளது. இந்நிலையில் எவ்வாறு ஏனைய பிரதேசங்களுக்கு இறைச்சி விநியோகம் செய்வது என இறைச்சி விற்பனையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X