2025 ஜூலை 19, சனிக்கிழமை

புலனாய்வாளரின் சடலம் என சந்தேகத்தில் அகழ்வு

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, விஸ்வமடு பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இராணுவ புலனாய்வாளர் ஒருவர்  கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் தங்கராஜா பரஞ்சோதியின் முன்னிலையில் சனிக்கிழமை (09), அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.

குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த அகழ்வு பணி நடைபெற்றது.
நிட்டம்புவ, அல்கம பகுதியைச் சேர்ந்த குறித்த இராணுவ வீரர், 572 இராணுவ படை பிரிவின் சிவில் படைப்பிரிவில் விஸ்வமடு பகுதியில் கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி இவர் காணாமல் போயிருந்தார்.

குறித்த இராணுவ வீரர்  கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் சந்தேகத்திக் பேரில்  அவரது மனைவி, தாய் மற்றும் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு அகழ்வுபணி நடைபெற்றது.

எனினும் இந்த அகழ்வில் எந்த மனித எச்சங்களும் தென்படாமையினால் அகழ்வு பணி நிறுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X