2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பிஸ்கெட் நிறுவனத்துக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பொதியில் குறிப்பிட்ட நிறையினை விட 20 கிராமை குறைத்து பொதியிட்டு நாடு முழுவதும் சந்தைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட தனியார் பிஸ்கெட் நிறுவனத்துக்கு, 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் பெருமாள் சிவகுமார், தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன், குறித்த பிஸ்கெட்கள் பொதிகளை அனைத்தும் யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களில் இருந்து மீளப்பெறவேண்டும் என கடுமையான உத்தரவினையும் பிறப்பித்தார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரிகளால் கடந்த வெள்ளிக்கிழமை (12) தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இவ்வாறு அபராதமும் கட்டளையும் திங்கட்கிழமை (15) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை பகுதியில் உள்ள தனியார் பிஸ்கட் நிறுவனம், பொதியிடப்பட்ட பையில் உள்ள நிறையினை விட குறைந்த நிறையில் பிஸ்கட்களை பொதி செய்து சந்தைப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் இணைப்பதிகாரி தனசேகரம் வசந்தசேகரனுக்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து குறித்த நிறுவனத்தின் பிஸ்கட் பொதிகளின் நிறைகள் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. கடந்த வாரம் பருத்தித்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 100 கிராம் பொதியிடப்பட்டுள்ளது என காண்பிக்கப்பட்ட பிஸ்கட் பையினை நிறுத்து பார்த்த போது 80 கிராம் மட்டுமே இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

நாடு முழுவதிலும் உள்ள குறித்த நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள பிஸ்கட் பொதிகளின் நிறை தொடர்பில் விசாரணை செய்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பணிப்பாளருக்கு நீதவான் கட்டளையிட்டார்.

மேலும் யாழ். மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட பிஸ்கட்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்துக்குள் மீளப்பெறவேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X