2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பசுமாட்டை திருடி இறைச்சியாக்கிய இருவர் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், மடம்றோட் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் திருடிய பசுமாட்டை, இறைச்சியாக்கிய இருவரை, இன்று ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியினைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார், இருவரையும் கைது செய்ததுடன், 75 கிலோகிராம் இறைச்சியினையும் மீட்டிருந்தனர். 

கைதான இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட இறைச்சியினை நீதிமன்ற உத்தரவு பெற்று எரியூட்டவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .