Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.நேசமணி
காரைநகரில் படகு கட்டுமானத் தொழிற்சாலை அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை (22) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
காரைநகரில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடியதாக 288 மில்லியன் ரூபாய் செலவில் இந்த படகு கட்டுமானத் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.
இந்த தொழிற்சாலைக்கான ஆரம்ப வைபவத்தில் கடற்றொழில் அமைச்சருடன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், காரைநகர் பிரதேச செயலாளர் திருமதி தே.பாபு, நாரா நிறுவனத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த தொழிற்சாலைக்கான நடுகல்லை கடற்றொழில் அமைச்சரும் விளம்பரப் பலகையை இராஜாங்க அமைச்சர் விஜயகலாவும் திரைநீக்கம் செய்துவைத்தனர்.
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் இந்த தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் பூரணப்படுத்தப்படும் என்று இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த படகு கட்டுமானத் தொழிற்சாலை வடக்கு மாகாணத்திலுள்ள கடற்றொழிலாளர்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமையும் என்று கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
சர்வதேச கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்காக 55 அடி நீளமுள்ள படகுகளைத் தயாரிக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே காரைநகரில் புதிய படகு கட்டுமான தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
58 minute ago
3 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago
5 hours ago
9 hours ago