2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’படகுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலம் நிறைவேற்றப்படும்’

Editorial   / 2017 ஜூலை 02 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

இலங்கை கடற்பகுதியில், இழுவை படகுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மேற்படி சட்டமூலம் தனிநபர் சட்டமூலமாக கொண்டுவரப்பட்டபோதும் அதனை அரசாங்கம் ஏற்று கொண்டு அரச சட்டமூலமாக நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் குறித்த சட்டவிரோதமான மீன்பிடி முறைகளுக்கு எதிராக எதிர்வரும் 6 ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ள சட்டமூலம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளும் பொருட்டு சந்திப்பொன்று இன்று (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X